பெற்றவனே கற்பழித்தான்: மகள் தற்கொலை
சென்னை:
தந்தையே தன்னை கற்பழித்த அதிர்ச்சியில் தனது உயிரையே மாய்த்துக் கொண்டார் சென்னையைச் சேர்ந்த பள்ளிமாணவி.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா. அவரது மனைவி பஞ்சவர்ணம் (30), மகள் பிரியா(12). பிரியா வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள்.
பிரியாவின் தந்தை கருப்பையா சமோசா விற்பவர். அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றம் அருகே குறளகபிளாட்பாரத்தில் துணிமணிகள் விற்று வருகிறார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரியாவின் வீட்டில் அழுகுரல் கேட்டது. அதைக் கேட்ட பக்கத்து வீடுகளில் வசித்தோர்அங்கு சென்று பார்த்தனர். அப்போது, வீட்டில் பிரியா உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
அதைப் பார்த்து அதிர்ந்த அவர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரியாவைக் கொண்டுசென்றனர். அங்கு உயிருக்குப் போராடிய நிலையிலும் தனக்கு நேர்ந்த அவலத்தை சிகிச்சை அளித்த டாக்டரிடம்பிரியா கூறினார்.
தன்னை தனது தந்தையே கட்டாயப்படுத்தி வியாழக்கிழமை இரவு கற்பழித்து விட்டார். இந்த அவமானத்துடன்பள்ளிக்குச் சென்றேன். இருந்தாலும் என்னால் இந்தக் கொடுமையை ஜீரணிக்க முடியவில்லை.
இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று டாக்டரிடம் பிரியா கூறியதாகத் தெரிகிறது.வாக்குமூலம் கொடுத்த சிறிது நேரத்தில் பிரியா இறந்து விட்டார்.
உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார்உடனடியாக தனிப்படையை அமைத்து தலைமறைவாகி விட்ட கருப்பையாவைத் தேடினர்.
போலீஸாரின் தீவிர தேடுதலில் பிராட்வே பஸ் நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக காத்திருந்த கருப்பையாபிடிபட்டார். மனைவியின் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் வெளியூருக்குத் தப்பிச் செல்ல கருப்பையாமுடிவு செய்திருந்ததாக தெரிகிறது.
சென்னையை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த கொடூர சம்பவம்.












Click it and Unblock the Notifications