திமுக VS

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க திமுக நடத்தும் மாநாடும், தமிழக அரசு நடத்தும் தமிழ்பண்பாட்டு வளர்ச்சி மாநாடும் ஒரே நாளில் நடப்பதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை அகற்றியதைக் கண்டித்து திமுக தலைமையில்,முக்கிய கட்சிகள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்கும் தமிழ் மாநாடு கடற்கரை சீரணி அரங்கில் சனிக்கிழமை மாலை5 மணிக்கு நடக்கிறது.

இந்தக் கூட்டத்தை தவிடுபொடியாக்குவதற்காக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு மாநாடு சீரணிஅரங்கத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்நடக்கிறது.

இந்த மாநாட்டிலும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். காலை 8.30க்குத் தொடங்கி இரவு 9 மணி வரைஇந்த மாநாடு நடக்கிறது.

இரு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இரு மாநாடுகளும்ஒரே நாளில், அருகருகே நடப்பதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+