ஆப்கானில் மீண்டும் அமெரிக்க விமானங்கள் தாக்குதல்
காந்தஹார்:
தலிபான் தலைவன் முல்லா ஒமர் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதாக வந்த தகவலையடுத்து, அமெரிக்கவிமானங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் மீண்டும் குண்டு மழை பொழிய ஆரம்பித்துள்ளன.
ஆனால் இப்போது மீண்டும் விமானப்படைகள் ஆப்கானிஸ்தானை தாக்குவதாக பாகிஸ்தான் நாளிதழ் கூறுகிறது.அந்தப் பத்திரிக்கை செய்தி விவரம்:
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் மற்று ஜவார் பகுதியில் அமெரிக்க வீரர்களை ஏற்றி வந்த 4ஹெலிகாப்டர்கள் நள்ளிரவு இறங்கியன. மேலும் கோஸ்ட் என்ற பகுதியில் முன்னாள் தலிபான் படைகளின்அமைச்சர் ஜலாலுதீன் ஹக்கானியின் தலைமையகத்தின் மீது இரவு முழுவதும் அமெரிக்கப் படைகள் குண்டு மழைபொழிந்தன.
இந்த கோஸ்ட் என்ற இடம் தான் அல்-கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சித் தளமாக இருந்து வந்தது. தோராபோராமலைப்பகுதியில் இருந்து தப்பி வந்த அல்-கொய்தாவினர் இந்த இடத்தில் இருப்பதாக அமெரிக்கா கருதிகிறது.
மேலும் அமெரிக்கா தேடி வரும் முக்கிய தலிபான் தலைவர் ஜலாலுதீன் ஜவார் இங்கு இன்னும்மறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த குண்டு வீச்சு இன்று (திங்கட்கிழமை) காலை வரை தொடர்ந்தது என்று அந்த பத்திரிக்கை கூறுகிறது.