பாகிஸ்தானில் டோனி பிளேர்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவிவரும் பதற்றத்தைத் தணிக்கும் விதமாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகஇங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் பாகிஸ்தான் போய் சேர்ந்தார்.
பின்னர் இன்று காலை ஜனாதிபதி மாளிகை சென்று கே.ஆர். நாராயணனைச் சந்தித்த பிளேர், பாகிஸ்தான்கிளம்பினார்.
சாக்லாலா விமான நிலையத்தில் பிளேரை வரவேற்றார் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார்.
இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாத அமைப்புகளை முடக்குவது தொடர்பாக பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரப்புடன் பிளேர் பேச்சு நடத்துவார்.
நேற்று வாஜ்பாயுடன் சுமார் ஒரு மணி நேரம் பேசிய பிளேர், இந்தியாவின் நிலையைத் தெளிவாக முஷாரப்பிடம்எடுத்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications