போர் விமானத்தில் பாக். சென்ற டோனி பிளேர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தான் மீது பயணிகள் விமானத்தில் பறப்பது ஆபத்தானது என்பதால் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்ராணுவத்தின் குண்டுவீச்சு விமானத்தில் பாகிஸ்தான் சென்றார்.

டெல்லியில் இருந்து இன்று புறப்பட்ட அவர் பிரிட்டனின் ராயல் ஏர்போர்ஸ் விமானப் படையின் சி-130ஹெர்குலிஸ் ரக விமானத்தில் அவர் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது இந்த விமானம்.

முன்னதாக அவர் இங்கிலாந்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேசின் சிறப்பு போயிங் விமானத்தில் அவர் பங்ளாதேஷ்வழியாக இந்தியா (பெங்களூர்) வந்தார். அதில் தான் அவர் டெல்லிக்கும் சென்றார். ஆனால், டெல்லியில் இருந்துராணுவ விமானத்தில் தான் இஸ்லாமாபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் வந்த சிறப்பு போயிங் விமானம் டெல்லியில் தான் நிறுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் நிறைந்த பாகிஸ்தானின் வான்வெளி மிக ஆபத்தானது என்பதாலும் அருகில் ஆப்கானிஸ்தான்இருப்பதாலும் அவரை ராணுவ விமானத்தில் தான் இங்கிலாந்து விமானப் படையினர் அழைத்துச் சென்றனர்.

இந்த விமானத்தில் இங்கிலாந்து ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படை கமாண்டோக்களும் உடன் சென்றனர்.

பிரதமர் பிளேரை ஒரு பாரா-கமாண்டோவைப் போலத் தான் அழைத்துச் செல்கிறோம் என ராயல் ஏர்போர்ஸ்அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த விமானத்தில் ஒரு அதிபரின் விமானத்தில் இருக்க வேண்டிய எந்தவசதியும் கிடையாது. ராணுவ வீரர்களுடன் அமர்ந்து தான் அவரும் அவரது மனைவியும் பயணம் செய்தனர்.

நாளை இதே விமானத்தில் தான் அவர் டெல்லி திரும்புவார். இங்கிருந்து பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் பயணிகள்விமானத்தில் லண்டன் செல்வார்.

இரு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற அப்போதைய அமெரிக்க அதிபர் பில்கிளின்டனும் இதே போல ராணுவ விமானத்தில் தான் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்பாகிஸ்தானுக்குள் அவர் பல கார்கள் மாறி மாறித் தான் பயணம் செய்ய வேண்டி இருந்தது.

அடுத்த நாட்டின் அதிபர் கூட சுதந்திரமாகப் பறக்க முடியாத அளவுக்கு பாகிஸ்தானின் வான்வெளிஆபத்தானதாகிவிட்டது.

பாகிஸ்தானின் பல தீவிரவாத அமைப்பினரிடம் சாம் ரக ஏவுகணைகள் உள்ளன. ஆப்கானிஸ்தானுக்குள் ரஷ்யப்படைகள் நுழைந்தபோது அவர்களை எதிர்க்க இந்த ஏவுகணைகளை அமெரிக்கா தான் தீவிரவாதிகளுக்குத் தந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.

தோளில் வைத்துக் கொண்ட லாஞ்சர் மூலம் இந்த ஏவுகணையைச் செலுத்தி விமானங்களை வீழ்த்த முடியும்.

பிளேர் பயணம் தோல்வி?:

இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க பிளேர் மேற்கொண்டுள்ள முயற்சிகள்தோல்வியடைந்துவிட்டதாக பிரிட்டன் பத்திரிக்கைகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

பிளேரின் பயணத்துக்குப் பின்னரும் இரு நாடுகளும் தொடர்ந்து படைகளைக் குவித்து வருகின்றன என தகார்டியன் கூறியுள்ளது. இதே போன்ற கருத்தைத் தான் பிற முக்கிய பத்திரிக்கைகளும் தெரிவித்துள்ளன.

புஷ்சுடன் தொலைபேசியில் பேச்சு:

பாகிஸ்தான் புறப்படும் முன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் டோனி பிளேர் தொலைபேசியில் 15 நிமிடங்கள்ஆலோசனை நடத்தினார்.

இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் தான் நடத்திய ஆலோசனை குறித்தும், பாகிஸ்தானில் தான் பேச உள்ளதுகுறித்தும் புஷ்சிடம் விளக்கினார் பிளேர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+