தமிழகத்தின் புதிய ஆளுநர் ராம்மோகன் ராவ்
டெல்லி:
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான பி.எஸ். ராமமோகன் ராவ் இன்று(செவ்வாய்க்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரலாக இருந்த ராமமோகன் ராவ், உடனடியாகத் தமிழகம்விரைகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவை முதல்வர் பதவி வகிக்க அழைத்ததாகப் புகார் கூறப்பட்ட பாத்திமாபீவி, தமிழக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஆந்திர ஆளுநரான டாக்டர் சி. ரங்கராஜனே தமிழக ஆளுநராகக் கூடுதல் பதவி வகித்து வந்தார்.
இதற்கிடையே தமிழகத்திற்கு விரைவில் புதிய முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக்கடிதம் எழுதப் போவதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக ராமமோகன் ராவ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் இடைக்காலப் பதவி வகிப்பவரும் ரங்கராஜனும் ஆந்திர ஆளுநர்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சென்னையில் படித்தவர் ராவ்:
தமிழகத்தின் புதிய ஆளுநரான ராம்மோகன் ராவ், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் (முதுகலை)படித்தவர்.
67 வயதாகும் ராமமோகன் ராவ், 1956ம் ஆண்டிலேயே ஆந்திராவில் போலீஸ் பணியில் சேர்ந்துவிட்டார்.
பின்னர் இன்டலிஜென்ஸ் பியூரோவில் 13 ஆண்டுகளும், 1960, "70களில் தெற்கு மத்திய ரயில்வேயில் தலைமைப்பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் ராமமோகன் ராவ்.
பின்னர் 1979 பிப்ரவரியில் ஆந்திர உளவுத் துறை டி.ஐ.ஜியாகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் 1986 மே மாதம்அம்மாநிலத்தின் டி.ஜி.பியாகப் பதவி உயர்வு பெற்றார்.
ஜனாதிபதி மெடல் உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ள ராமமோகன் ராவ், டி.ஜி.பியாக இருந்தபோது, ஆந்திரநக்சலைட்டுகளான மக்கள் போர்க் குழுவினரை அடக்கியதில் பெரும் பங்கு வகித்தார்.
கடந்த 1993ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்ற பின், முழுக்க முழுக்க சொந்த பிசினசில் இறங்கி விட்டார் ராமமோகன்ராவ். இந்தியத் தொழில் சம்மேளனத்தின் (சி.ஐ.ஐ.) ஆந்திர மாநிலத் தலைவராக இருந்தார் இவர்.
விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட ராமமோகன் ராவ், 1986 முதல் 1992 வரை ஹைதராபாத் கிரிக்கெட்சங்கத்தின் தலைவராக இருந்தார்.
-
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications