பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள், ஆயுதங்களை அனுப்பியது சீனா
இஸ்லாமாபாத்:
எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு கப்பல் கப்பலாக போர் விமானங்களையும்ஆயுதங்களையும் சீனா சப்ளை செய்துள்ளது.
அசெம்பிள் செய்யப்படாத எப்-7எம்ஜி ரக போர் விமானங்களும், போர் விமானங்களில் பயன்படுத்தப்படும்ஆயுதங்களும் இக்கப்பல்களில் சீனாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 40 போர் விமானங்கள் வரை அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அணு ஆயுதங்களைப்பயன்படுத்துவதற்குத் தேவையான ஸ்பேர்களையும் பாகிஸ்தானுக்குச் சீனா அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவிவரும் இவ்வேளையில் "ஸ்பீட் டெலிவரி" மூலம் சீனா இவற்றைஅனுப்பியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பகிறது.
கடந்த மாதம் (டிசம்பர் 2001) பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் சீனாவுக்குச் செல்வதற்கு முன்பே இவைஅனுப்பப்பட்டு விட்டதாகவும் "தி நியூஸ்" கூறியுள்ளது.
பாகிஸ்தானுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் பொருட்டே இவற்றை அனுப்புகிறோம் என்று சீனாகூறியுள்ளதாகவும் அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
சீனா அனுப்பிய இந்த விமானங்கள் 10 நாட்களிலேயே கராச்சி வந்துவிட்டதையடுத்து, அவற்றை உடனடியாகவிமானப் படையில் சேர்த்து விட்டது பாகிஸ்தான்.
இந்த காம்பாட் ரக போர் விமானங்களில் 355 விமானங்கள் பாகிஸ்தானிடம் இருந்ததாகவும், தற்போதுசீனாவிடமிருந்து வந்ததையும் சேர்த்து அவற்றின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது என்றும் "ஜேன்ஸ்" என்றபத்திரிக்கை கூறியுள்ளது.
ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் இத்தகவலை உறுதிப்படுத்தமறுத்துவிட்டதாக "தி நியூஸ்" கூறியுள்ளது.
இதே காம்பாட் ரக போர் விமானங்கள் இந்தியாவிடம் 800 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சீட், ஒரு இன்ஜின் கொண்ட இந்த இலகு ரக போர் விமானம், பெரும்பாலும் குண்டு வீசுவதற்காக மட்டுமேபயன்படுத்தப்படும்.
இந்தியா-பாக். அமைதியாக இருக்க சீனா-ஜப்பான் வேண்டுகோள்:
பாகிஸ்தானுக்கு இவ்வளவு உதவிகளையும் செய்துள்ள சீனா, தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில்இந்தியாவையும் பாகிஸ்தானையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
பெரும்பாலும் சீனப் பத்திரிக்கைகளே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. இந்திய-பாகிஸ்தான் தலைவர்கள்நேருக்கு நேர் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் அப்பத்திரிக்கைகள் வலியுறுத்தியுள்ளன.
சார்க் மாநாட்டில் சிறிது நேரம் பேசிய முஷாரப்பும் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் மீண்டும் சந்தித்துப் பேசவேண்டும் என்று ஜப்பானும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீவிரவாதத்தை உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று ஜப்பான் வெளியுறவுத் துறைஅமைச்சகம் ஒரு செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications