வருகிறது போர் வரி
டெல்லி:
பாதுகாப்புத் துறைக்கு இன்னும் அதிகமாகச் செலவிட வேண்டியிருப்பதால் புதிய வரிகளை விதிப்பதற்கானஅதிகாரம் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் இவ்வேளையில் மத்திய அரசின் இந்தஅறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வரி விதிப்பிற்கான அனைத்து அதிகாரங்களையும் சின்ஹாவுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளதையடுத்து,பாகிஸ்தானுடன் போர் தொடுக்கவும்கூட இந்தியா முழு அளவில் தயாராகி வருவது தெரிய வருகிறது.
வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின்போதுதான் புதிய வரிகள் விதிக்கப்படும்.
ஆனால் தற்போது "அவசரகால வரி" என்ற பெயரில் அடுத்த சில தினங்களிலேயே பல புதிய வரிகளை சின்ஹாஅறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பல பொருள்களின் விலை "ஜெட்" வேகத்தில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போர் வரும் சூழ்நிலையில் அவசர அவசரமாக விதிக்கப்படும் இந்த வரிகளை யாரும் எதிர்க்க முடியாது. எனவேவிலையேற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டியதுதான் ஒரே வழி.
கடந்த மாதம் பாகிஸ்தானும் திடீர் போர் வரியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications