இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் 17ம் தேதி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர்கள் 17ம் தேதிக்குப் பின்அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 21ம் தேதிநடக்கவிருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்புதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
திமுக வேட்பாளர்கள் வரும் 17ம் தேதிக்கு மேல் அறிவிக்கப்படுவார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications