மசூதிக்குள் புகுந்த தீவிரவாதிகள்: ஒருவன் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மசூதிக்குள் புகுந்து 2 தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடும்துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொருவன் குண்டுக் காயங்களுடன்சரணடைந்தான்.
உடனே சுதாரித்துக் கொண்ட ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். அங்கு சிறிது நேரம் கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இதையடுத்து மிரண்டு போய் ஓட ஆரம்பித்த 2 தீவிரவாதிகளை ராணுவத்தினர் விரட்டினர். ஆனால் அந்த 2தீவிரவாதிகளும் அங்குள்ள ஒரு மசூதிக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
உடனடியாக ராணுவத்தினரும் போலீசாரும் மசூதியைச் சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளை உடனே சரணடைந்துவிடுமாறு ராணுவத்தினர் வேண்டுகோள் விடுத்துப் பார்த்தனர்.
ஆனால் தீவிரவாதிகளிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே, மசூதிக்குள் ராணுவத்தினர் அதிரடியாகப்புகுந்தனர்.
இதையடுத்து ராணுவத்தினர் மீது அந்த 2 தீவிரவாதிகளும் மீண்டும் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.ராணுவத்தினரும் பதிலுக்குச் சுட்டனர்.
மசூதிக்கு எந்தவிதமான சேதமும் வந்து விடக்கூடாது என்று கருதிய ராணுவத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடனேயேதொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் 2 தீவிரவாதிகளுமே குண்டடி பட்டு விழுந்தனர். ராணுவத்தினர் சென்று அவர்களைப்பிடித்தபோது, ஒரு தீவிரவாதி பலியானது தெரிய வந்தது. மற்றொருவன் குண்டுக் காயங்களுடன் ராணுவத்திடம்சரணடைந்துவிட்டான்.
எல்லையில் பாக். ராணுவம் சுட்டு பி.எஸ்.எப். வீரர் காயம்:
இதற்கிடையே ஜம்மு மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவம்சுட்டதில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
அக்னூர் பகுதியில் எல்லைக்கு அப்பாலிருந்து நேற்று மாலை திடீரென்று பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள்மகாதியோ கச்சாப் என்ற இந்த வீரர் மீது பாய்ந்தன.
அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுபோலவே எல்லையிலுள்ள பல பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் திடீரென்று துப்பாக்கிச் சூடுநடத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications