போட்டியின்றி ராஜ்ய சபா எம்.பி. ஆனார் டாக்டர் மைத்ரேயன்
சென்னை:
ராஜ்யசபா எம்.பியாக அதிமுக வேட்பாளர் டாக்டர் மைத்ரேயன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமாகா தலைவர் மூப்பனார் மறைவையடுத்து, அவர் வகித்து வந்த எம்.பி.பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்த பதவிக்கு அதிமுக சார்பில் மைத்ரேயன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 117 எம்.எல்.ஏ.க்களின வோட்டுக்கள் தேவை.அதிமுகவுக்கு மட்டுமே 132 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
இதனால் வேறு யார் போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது. இந்நிலையில் வேட்பு மனுத் தாக்கல் கடந்ததிங்கட்கிழமை மாலை 3 மணியோடு முடிந்தது. ஆனால் மைத்ரேயனும், பத்மராஜன் என்பவரும் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது 10 எம்.எல்.ஏ.க்கள் முன் மொழிய வேண்டும். மேலும் ரூ.5,000 டெபாசிட்கட்ட வேண்டும். ஆனால் பத்மராஜனுக்கு யாரும் முன் மொழியவுமில்லை. அவர் டெபாசிட் பணமும்கட்டவில்லை.
எனவே நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடந்தபோது, பத்மராஜனின் வேட்புமனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
இதையடுத்து ராஜ்யசபா எம்.பியாக டாக்டர் மைத்ரேயன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications