பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை முடித்துக் கொள்ள முஷாரப் திட்டம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தன் தலைமையின் கீழான ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பாகிஸ்தான் மக்கள்கட்சியிடம் அரசை ஒப்படைக்க அதிபர் பர்வேஸ் முஷாரப் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பைத் தூக்கி எறிந்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றினார் முஷாரப். அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக மட்டுமேஇருந்தார்.

ராணுவ ஆட்சியாளரகாப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகுதான், காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான "ஆக்ரா மாநாட்"டுக்குத் தேதி குறிக்கப்பட்டது.

ஆக்ரா மாநாட்டுக்கு வெறும் ராணுவ ஆட்சியாளராகப் போனால் தனக்கு மதிப்பு இருக்காதே என்று நினைத்தமுஷாரப், அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதியான ரபிக் தராரை வீட்டுக்கு அனுப்பி விட்டு, தன்னையேபாகிஸ்தான் ஜனாதிபதி என்று பிரகடனம் செய்து கொண்டார்.

உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்பதற்காகத் தன்னையே பாகிஸ்தான் ஜனாதிபதியாகஅறிவித்துக் கொண்ட முஷாரப், இந்தியா வந்தார். ஆக்ரா மாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால் ஆக்ராவில்வாஜ்பாய்க்கும் முஷாரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததுதான் மிச்சம்.

இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதையடுத்து, எல்லையில் போர் மேகம்சூழ்ந்துள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தி வருவது சுதந்திரப் போர்தானே தவிர, தீவிரவாதம் அல்ல என்று எப்போதும் கூறிவருவதைப் போலவே இப்போதும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆனால் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், அந்நாட்டுடன்பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

கடந்த வாரம் நடந்த சார்க் மாநாட்டின்போதும் முஷாரப்-வாஜ்பாய் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்றுஉலகமே பார்த்துக் கொண்டிருந்தது. முஷாரப்பும் வாஜ்பாயின் கைகளைக் குலுக்கி என்னவெல்லாமோ தாஜாசெய்து பார்த்தார்.

ஆனாலும் இந்தியா தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இதையடுத்து எல்லையில்ஒரு சதவீதம் கூடக் குறையாத பதற்றம், தற்போது கூடிக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முஷாரப் முடிவு செய்துவிட்டார்.

எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்னும் தற்போதைய சூழ்நிலையில், ராணுவ ஆட்சியைத் தொடர்ந்தால் சரியாகஇருக்காது என்று நினைக்கிறார் முஷாரப்.

இதையடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சியிடம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, ராணுவத்தைமட்டும் தான் கவனித்துக் கொள்ள முஷாரப் முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவையை அவர் மீண்டும்ஆட்சியமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+