முஷாரப்புக்கு அமெரிக்கா மேலும் நெருக்கடி
இஸ்லாமாபாத்:
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் அமெரிக்க எம்.பிக்கள்பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் விளைவாக காஷ்மீர் சட்டசபை தாக்கப்பட்டது. இறுதியில் இந்திய நாடாளுமன்றமே தாக்குதலுக்குள்ளானது.
இவ்வளவு நடந்தும் பாகிஸ்தான் தன்னுடைய பிடிவாதத்தைக் குறைத்த மாதிரியே தெரியவில்லை. இந்தியாகேட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளையும் தீவிரவாதிகளையும் ஒப்படைக்கவும் மறுத்து வருகிறது.
இதையடுத்து பாகிஸ்தான் மீது போர் தொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. எல்லைப் பகுதிகளில் இந்தியராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானும் எல்லைகளில் ராணுவத்தைக் குவிக்க ஆரம்பித்தது.
இடையிடையே இரு தரப்பினரும் கடும் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றையெல்லாம் கண்ட மேற்கு நாடுகள் பதறிப் போயின. முக்கியமாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் மிகவும்கவலை கொள்ள ஆரம்பித்தன. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியாக இருக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள்விடுத்து வருகின்றன.
அந்த நாடுகள் எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் அமைதித் தூதராய்இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொண்டார்.
ஆனால் அவரின் பயணம் கிட்டத்தட்ட தோல்வியடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. எல்லையில்தீவிரவாதத்தைக் கைவிடும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே இல்லை என்பதை இந்தியா தெளிவாகக்கூறிவிட்டது.
பாகிஸ்தானும் பிளேரின் வார்த்தைகளை சிறிதும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. மேலும்இந்தியாவை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவை எச்சரித்தார் முஷாரப்.
இதையடுத்து அமெரிக்கா தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரவாதத்தை கட்டாயம் முடிவுக்குக்கொண்டுவர வேண்டும் என்று அந்நாடு பாகிஸ்தானை வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து பேசுவதற்காக பாகிஸ்தானுக்கு 9 எம்.பிக்களையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது. அந்த எம்.பிக்கள்நேற்று முஷாரப்பைச் சந்தித்து காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேசியுள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தைக் குறைத்தால்தான் எல்லையில் பதற்றம் குறையும் என்று அவர்கள் முஷாரப்பைநெருக்கியுள்ளனர்.
இதையடுத்து முஷாரப் இன்னும் ஓரிரு நாட்களில் காஷ்மீர் பிரச்சனை குறித்து ஒரு தெளிவான, புதிய முடிவைஅறிவிப்பார் என்றும் அமெரிக்க எம்.பிக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications