லாரி மோதி திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர் சாவு
திருச்சி:
திருச்சி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி ஒருவர்உடல் நசுஙகி இறந்தார்.
சேலத்தை சேர்ந்த ராஜா அண்ணாமலை(23), திருச்சி வெற்றி ராஜன் (23) இருவரும் திருச்சி மருத்துவக் கல்லூரிமாணவர்கள். மருத்துவ விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பரீட்சை நடைபெறுவதால் இரவு முழுவதும் விழித்திருந்து படிக்க எண்ணி, இரவு 11.30க்கு ஒருமோட்டார் சைக்கிளில் ஜங்சன் பஸ் நிலையம் வந்து ஒரு கடையில் டீ குடித்தனர் இந்த மாணவர்கள்.
அதன் பிறகு இருவரும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, கோரிமேடு பகுதியில் முன்னே சென்ற ஒருவேனை முந்திச் சென்ற போது எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் ராஜா அண்ணாமலை லாரி சக்கரத்தில் நசுங்கி அதே இடத்தில் இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவெற்றி ராஜனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications