செக்ஸ் டாக்டர் ஆபாசப் படத்தில் நடித்த மற்றொருவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செக்ஸ் டாக்டர் பிரகாஷ் எடுத்த ஆபாச படத்தில் நடித்த நடிகர் சரவணன் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டார்.

ஆபாச படம் எடுத்தது தொடர்பாக பிரகாஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்அவர் படத்தில் நடித்த சரவணன் (25) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சரவணன் போலீசாரிடம்கூறியதாவது:

எனது சொந்த ஊர் ஆரணி. 10ம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு பிறகு படிப்பு ஏறாததால் சென்னைக்கு வேலைதேடி வந்தேன். எனது மைத்துனர் மைக்கேல் பிரகாஷின் ஆஸ்பத்திரியில் கார் டிரைவராக வேலை பார்த்தார்.வேலை தேடி வந்த நான் மைக்கேல் வீட்டில் தங்கினேன்.

அப்போது எனக்கு கேண்டீனில் வேலை கிடைத்தது. ஒரு நாள் மைக்கேல் என்னை டாக்டரிடம்அறிமுகப்படுத்தினான். அவர் என்னிடம் மருத்துவமனையில் வார்ட்பாயாக சேர்ந்து விடு என்று அன்பாகப்பேசினார். அதனால் நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன்.

டாக்டரை தேடி மருத்துவமனைக்கு அழகான பெண்கள் நிறைய வருவர். டிவி நடிகை ஒருவரும் அவரை அடிக்கடிபார்க்க வருவார். ஒரு நாள் டிவி நடிகையைக் கட்டிப் பிடித்து டாக்டர் நெருக்கமாக இருந்தபோது நான் அவரதுஅறைக்குள் சென்று விட்டேன்.

ஆனால் டாக்டர் கோபிக்கவில்லை. டிவி நடிகை போனபோது மைக்கேலிடம், சரவணனுக்கு மாங்காய் பறிக்கும்வேலை கொடுத்து விட வேண்டியது தான் என்று அவர் கூறினார். ஆபாசப் படத்தில் நடிப்பதை தான் அவர் சங்கேதபாஷையாக கூறினார்.

மறுநாள் முதல் என்னை வளசராவாக்கம் பங்களாவில் தங்க வைத்தார். அங்கு என்னைப் போல் வாட்டசாட்டமாக15 இளைஞர்கள் தங்கி இருந்தனர். எங்களுக்கு காலையில் எழுந்தவுடன் பச்சை முட்டை, பீட்ரூட் ஜூஸ், காரட் ஜீஸ்கொடுப்பார்கள்.

வீரிய சக்தியை தூண்டும் உணவு வகைகளும் இருக்கும். நன்றாக உடற்பயிற்சி செய்யச் சொல்வார்கள். பிறகுஆபாசப் படத்தில் நடிக்க காரில் அழைத்து செல்வார்கள். பெரும்பாலும் உல்லாசத் தீவிலும், மகாபலிபுரம் அருகில்கடற்கரை பங்களாவிலும் தான் ஷூட்டிங் நடக்கும்.

நான் முதலில் நடித்தது டிவி நடிகையுடன் தான். தினம் 3 பெண்களுடன் விதவிதமாக நடிக்க வேண்டும். அலுப்புதெரியாமல் இருக்க மது கொடுப்பார்கள். அல்லது போதை மாத்திரை, ஊசி போடுவார்கள். ஒவ்வொருபெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆயிரம் ரூபாய் தருவார் டாக்டர்.

சில நாட்கள் கழித்து எனக்கு வீடியோ படம் எடுக்கவும் கற்றுக் கொடுத்தார். நான் படம் பிடிக்கும்போது டாக்டர்ஓரமாக நின்று கொண்டு எந்தெந்த கோணத்தில், எப்படி அழகு காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார்.

செக்ஸ் படத்தில் நடிக்க நடிகைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் ஆண்களுக்கு தான் பஞ்சம். கிடைத்தாலும்நம்பிக்கையான ஆட்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு முறை 13 வயது பெண்ணுடன் நடித்தேன். அந்தப் பெண் அழுது கொண்டே நடித்தார். டாக்டர் துப்பாக்கியால்மிரட்டி நடிக்க வைத்தார் என்று சரவணன் போலீசாரிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+