நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சந்திக்க தயார் என்கிறார் கருணாநிதி
சென்னை:
டான்சி அப்பீல் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதித்ததாக தமிழக அரசு தொடர்ந்துள்ளவழக்கை சந்திக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிதெரிவித்துள்ளார்.
டான்சி மற்றும் கொடைக்கானல் ஹோட்டல் வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த மாதம்4ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கருணாநிதி விமர்சனம் செய்து பேட்டி கொடுத்துள்ளதாகவும், முரசொலியில் கட்டுரைஎழுதியுள்ளதாகவும், அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அட்வகேட்ஜெனரல் என்.ஆர். சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்குப் பற்றி கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு எந்த வழக்கை என் மீது தொடுத்தாலும் அதை நான் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறேன்.
முதல்வராக இருந்தவர் சட்டசபையில் முதல் நாள் நீதிமன்றத்தை அவமதித்து பேசிவிட்டு, மறு நாள் மறுத்துவிளக்கம் அளித்தது உண்டு.
அவர் யார் என்றும் உங்களுக்கே தெரியும் என்று கூறினார் கருணாநிதி.
"பத்திரிக்கைகளில் வரும் செய்திகளுக்கு, நிறுவனர் பொறுப்பாக மாட்டார், ஆசிரியர் தானே பொறுப்பாவர்" என்றுகேட்டதற்கு, "அதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் இப்பொழுது முரசொலி ஆசிரியர்நானில்லை" என்று கருணாநிதி பதிலளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications