நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ரூ.70 லட்சம் ஊழல்: 2 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்
கடலூர்:
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நிலத்தடி நீருக்குக் குழாய் அமைப்பதில் ரூ.70 லட்சம் ஊழல் செய்த 2இன்ஜினியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க டைரக்டர் நிலத்தடிநீர் பிரிவு இன்ஜினியர்களிடம் 10 கி.மீ. தூரத்துக்குகுழாய் பதிக்க உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அந்த இன்ஜினியர்களோ தரம் குறைந்த குழாய்களைப் பதித்து அதன் மூலம் ரூ.70 லட்சம் மோசடிசெய்துள்ளனர்.
இதுபற்றி ஊழல் தடுப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து விசாரித்த ஊழல் தடுப்பு அதிகாரி, ஊழல்நடந்திருப்பதை உறுதி செய்தார்.
அதன்படி நிலக்கரி நிறுவனத்தின் நிலத்தடி நீர் பிரிவு தலைமை இன்ஜினியரும், மற்றொரு இன்ஜினியரும்சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதே ஊழலில் தொடர்புடையே மேலும் 3 ஊழியர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.
சல்பர் ஆயிலுக்கு பதில் தண்ணீரை அனுப்பி மோசடி:
இந்நிலையில் இதே நிறுவனத்தில் நடந்த மற்றொரு ஊழலும் தெரிய வந்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடமிருந்து, நிலக்கரி நிறுவனத்தில் உள்ள பெர்டிலைசர் நிறுவனத்துக்கு சல்பர்ஆயில் வாங்கப்படுகிறது. டேங்கர் லாரிகள் மூலம் சல்பர் ஆயில் இங்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
நிலக்கரி நிறுவன அதிகாரிகள் சமீபத்தில் இந்த லாரியைச் சோதனை செய்ததில் சல்பர் ஆயிலுக்கு பதிலாக தண்ணீரைசப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 லோடுகளாவது இந்த மாதிரி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதில் சுமார் ரூ.30லட்சம் மோசடி நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications