புலிகளை அனுமதிக்கக் கூடாது: வாஜ்பாய்க்கு பன்னீர் கடிதம்
சென்னை:
விடுதலைப்புலிகள் இந்தியாவில் தங்கி பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் வாஜ்பாய்க்குதமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
நார்வே குழுவினருடன் நடத்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக, தங்களுடைய செய்தித் தொடர்பாளர்பாலசிங்கத்தை குடும்பத்தினரோடு சென்னையில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வாஜ்பாய்க்கு பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) எழுதியுள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது:
விடுதலைப்புலிகள் இங்கு தங்குவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது. ராஜீவ் காந்தியின் படுகொலை இன்னமும்தமிழக மக்களின் மனதில் வடுவாய் பதிந்துள்ளது.
மேலும் புலிகள் தமிழகத்தில் நடத்திய வன்முறைகளையும் மக்கள் மறக்கவில்லை. 1989-91ம் ஆண்டு புலிகளின்நடமாட்டம் தமிழகத்தில் இருந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், தன் உயிரையும் பணயம் வைத்துபுலிகளின் நடமாட்டத்தை ஒடுக்கினார்.
பிறகு 1996-2001ம் ஆண்டுகள் வரை நடந்த திமுக ஆட்சியின்போது திரும்பவும் விடுதலைப் புலிகள் தமிழகத்தில்நடமாடினர். ஆனால் இப்போது நடக்கும் அதிமுக ஆட்சியில் பெரும்பாலான புலிகளை கைது செய்துள்ளோம்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளைத் தங்க அனுமதித்தால் அவர்கள் திரும்பவும் தமிழகத்தில் காலூன்ற அனுமதிஅளித்தது போல் ஆகிவிடும். இந்தியாவில் எங்குமே இவர்களை அனுமதிக்கக் கூடாது.
எல்லைகளில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் இவர்களையும் அனுமதித்தால் இந்தியாவில் சட்டம், ஒழுங்கு கெடும்.அவர்களால் இந்தியாவில் மேலும் பதற்றம் அதிகரிக்கும்.
எனவே இந்தியாவில் விடுதலைப் புலிகள் தங்கி பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும்அவர்கள் சென்னையில் தங்குவதற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்றும் அக்கடிதத்தில் பன்னீர்செல்வம்கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications