போலி வேட்பாளர்கள் சேர்ப்பா? - விசாரிக்க வருகிறார் மத்திய தேர்தல் அதிகாரி
டெல்லி:
ஆண்டிப்பட்டி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக மத்திய தேர்தல் கமிஷன் அதிகாரி இன்று (வியாழக்கிழமை)தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 21ம்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் 11,000 போலி வாக்காளர்களும் சைதாப்பேட்டையில் 18,000 போலிவாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுகவினர் புகார் கூறினர்.
இதுகுறித்து மத்திய தேர்தல் கமிஷனிடம் திமுக எம்.பிக்களான குப்புசாமி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் புகார்கொடுத்தனர்.
இதையடுத்து, இவ்விரு தொகுதிகளிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பது பற்றி விசாரணைநடத்துவதற்காக ஒரு அதிகாரியை அனுப்ப மத்திய தேர்தல் கமிஷன் முடிவெடுத்தது.
அதன்படி ஒரு தேர்தல் அதிகாரி இன்று தமிழகம் வருகிறார். ஆண்டிப்பட்டி மற்றும் சைதாப்பேட்டைதொகுதிகளுக்கு அவர் நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளார்.
அந்த அதிகாரி அறிக்கை சமர்ப்பித்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன்வட்டாரங்கள் தெரிவித்தன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications