சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பெரும் அமளி
சென்னை:
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியதால் கூட்டம் 1 மணி நேரத்திற்கு மேல் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மேயர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
கூட்டம் ஆரம்பித்தவுடனே தமாகா கவுன்சிலர் வெற்றிவேல், 66வது வார்டில் பள்ளிக்கூடம் கட்டுவது தொடர்பாகஎந்த அறிவிப்பும் தற்போதைய தீர்மானங்களில் இல்லை என்றார். ஆனால் தீர்மானத்தில் உள்ளவற்றை மட்டும் பேசவேண்டும் என்று மேயர் கூறினார்.
இதற்கு வெற்றிவேல், "மேயர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். தீர்மானம் கொண்டு வரும் அதிகாரத்தைஅவரிடம் இருந்து பறிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதனால் இரு தரப்பினரிடையே பெரும் அமளி ஏற்பட்டதையடுத்து மன்றக் கூட்டத்தை ஒத்தி வைப்பதாகஸ்டாலின் அறிவித்து விட்டு எழுந்து சென்றார்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு அதிமுக துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனது தலைமையில் மன்றக் கூட்டம்நடக்கும் என்று அறிவித்ததால், அங்கு மேலும் கூச்சல், குழப்பமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் 11.15மணிக்கு மன்றக் கூட்டத்தை ஆரம்பித்தார் ஸ்டாலின்.
கூட்டம் ஆரம்பித்ததும் அதிமுக கவுன்சிலர் ஒருவர் எழுப்பிய பிரச்சனைக்கு ஆதரவாக துணை மேயர் கராத்தேதியாகராஜன் இருக்கையில் அமர்ந்து பேச ஆரம்பித்தார். துணை மேயர் இருக்கையில் அமர்ந்து கொண்டே பேசக்கூடாது என்று மேயரும், திமுக கவுன்சிலர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து மேயரை ஒருமையில் பேசினர். இதற்கு ஸ்டாலின் மிகவும்வேதனையடைந்து, எது வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் மேயருக்கு உரிய மரியாதை கொடுத்து பேசுங்கள்என்று கூறினார்.
பின்னர் கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மறு தேதிகுறிப்பிடப்படாமல் மன்றக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications