5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு இல்லை: தமிழக அரசு திடீர் பல்டி
சென்னை:
5ம் வகுப்பிலிருந்து பொதுத்தேர்வு என்ற உத்தரவு வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படாது என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது.
5லிருந்து 9ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதனால் மாணவர்களின்கல்வித்திறன் அதிகரிக்கும் என்றும் கூறி வந்தது.
ஆனால் இந்த அறிவிப்புக்கு பல கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஏழை மாணவர்கள்படிப்பதையே நிறுத்தி விடுவார்கள் என்று எதிர்க் கட்சிகள் கூறி வந்தன.
இந்நிலையில் கல்வி அமைச்சர் தம்பிதுரை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதியில் புதிதாகநடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறை வரும் கல்வியாண்டில், அதாவது 2002-03 முதல்நடைமுறைப்படுத்தப்படாது.
மாறாக, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு நல்ல அடிகட்டுமானத்தை உருவாக், அரசு வரும் கல்வி ஆண்டுமுழுவதும் முன் ஆயத்தம் செய்து முடித்த பிறகே, இந்த புதிய திட்டத்தை 2003-04லிருந்து செயல்படுத்துவதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தம்பிதுரை கூறியுள்ளார்.
பல்வேறு தரப்பில் இருந்து வந்த கண்டனத்தின் எதிரொலியே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
