ஜெ. மீதான லண்டன் ஓட்டல் வழக்கு தனி நீதிமன்றத்திற்கு மாற்றம்
சென்னை:
ஜெயலலிதா மீதான லண்டன் ஓட்டல் வழக்கை முதலாவது தனி நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி சொத்து சேர்த்த வழக்கில்ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குதொடர்ந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஜெயலலிதாவும், தினகரனும் லண்டனில் நட்சத்திரஹோட்டல்கள் இரண்டை வாங்கி விற்றதன் மூலம் 43 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக வழக்குதொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை போலீசார் முதன்மை செஷன்ஸ் நீதிபதி முன்பு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அசோக்குமார் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் நீதிமன்றத்தில்ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார். ஆனால் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த சம்மனை ரத்து செய்யுமாறும் வழக்கை தனி நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதாவும்,தினகரனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:
விசாரணையின் ஆரம்பக் கட்டத்திலேயே இதுபோன்று அனுப்பப்படும் சம்மனை ரத்து செய்ய முடியாது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கையும் லண்டன் ஓட்டல் வழக்கையும் ஒரே வழக்காக விசாரிக்கமுடியாது.
வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்த வழக்கின் விசாரணை தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவேலண்டன் ஓட்டல் வழக்கை தனியாக உயர் நீதிமன்றத்தில் நடத்துவது சாத்தியமில்லை.
இதனால் லண்டன் ஓட்டல் வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து தனி நீதிமன்றத்துக்குமாற்றப்படுகிறது.
இவ்வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விரைந்து விசாரித்து ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்என்று நீதிபதி தினகரன் தன் உத்தரவில் கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications