புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு: சென்னையில் 108 பேர் கைது
சென்னை:
ரயில்வே ஸ்டேஷன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அம்பேத்கார் புரட்சிப் புலிகள்தலைவர் கிருஷ்ண பறையனார் உட்பட 108 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தின்படி மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பாக முண்ட கன்னியம்மன்கோவில் அருகில் புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த பணிகளுக்காக அந்த பகுதியில் அமைந்திருக்கு நூற்றுக்கணக்கான குடிசை வாழ் மக்களை காலி செய்யுமாறும்அவர்களுக்கு சென்னை புறநகரில் இடம் ஒதுக்குவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
ரயில்வேயின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அம்பேத்கார் புரட்சிப்புலிகள் அமைப்பின் தலைவர்கிருஷ்ண பறையனார், நேற்று (வியாழக்கிழமை) தனது கட்சியினருடன் சாலை மறியல் நடத்தச் சென்றார்.
இதற்கு அனுமதியளிக்காத போலீசார், ஆர்ப்பாட்டத்துக்குச் செல்லும் வழியில் கிருஷ்ண பறையனார் உட்பட 108பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications