நக்கீரன் நிருபர் கோவை சிறையில் அடைப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
போலீசார் விசாரணை முடிந்து விட்ட நிலையில் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் கோவை சிறையில்அடைக்கப்பட்டார்.
வீரப்பனுக்கு ஆயுதம் கொண்டு சென்றதாக சிவசுப்பிரமணியன் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இப்போது அவர் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தேசியப் படைத் தீவிரவாதிகளால் வெள்ளித்திருப்பூரில் போலீஸ் நிலையம்தாக்கப்பட்டது தொடர்பாக சிவசுப்பிரமணியத்தை விசாரித்த போலீசார் இன்று(வெள்ளிக்கிழமை) பவானிநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்போது சிவசுப்பிரமணியத்தின் வழக்கறிஞர், அவரை கோயம்புத்தூர் சிறையில் காவலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். நீதிபதி கிருஷ்ணனும் அவரை கோயம்புத்தூர் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து சிவசுப்பிரமணியம் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications