ஆண்டிப்பட்டியில் போலி வாக்காளர்கள் கண்டுபிடிப்பு
தேனி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் குளறுபடிகள் நடந்துள்ளது தேர்தல் அதிகாரிநடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வரும் பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்நடைபெற உள்ளது. அதனால் புதிய வாக்காளர்கள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.
இந்த புதிய வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக திமுக தரப்பில் புகார் வந்ததைஅடுத்து, ஆண்டிப்பட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்திய தேர்தல் கமிஷன் செயலாளர் ராவ் விசாரணைநடத்தினார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள கொண்டம நாயக்கன்பட்டியில் ஆறாவது வார்டு வடக்கு தெருவில் ஒரு வீட்டில்முருகன் என்பவர் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் இருந்தது.
ஆனால், அந்த வீட்டில் கழுவத்தேவர் என்பவர் குடியிருந்தார். அவரிடம் முருகன் எங்கே என்று கேட்டபோது,அப்படி யாரும் இல்லை என்று முதலில் கூறினார். பின்னர் வேலைக்கு சென்று விட்டதாக கூறினார். அவர்ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவாரா என்று தேர்தல் அதிகாரி கேட்டதற்கு, முருகன் 5ம் வகுப்பு வரை தான்படித்துள்ளதாகக் கூறினார்.
பின்னர் அதிகாரி குழு மற்றொரு வீட்டுக்குச் சென்றது. அந்த வீட்டில் வீரலட்சுமி, பள்ளியில் 11ம் வகுப்புபடிக்கிறார், மற்றும் பூபதி 12ம் வகுப்பு, இருவருக்கும் 18 வயதாகவில்லை. இருவர் பெயரும் வாக்காளர்பட்டியலில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பிறகு அதிமுக பொறுப்பாளர் முருகன் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அவரது வீட்டில்மொத்தம் 9 பேர் பட்டியலில் இருந்தது. ஆனால் அவரது வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்தனர். மற்றவர்கள்வெளியூர் சென்று விட்டதாக ராமன் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தை ராவ் ஏற்க மறுத்து விட்டார்.
இதே போல் ஆண்டிப்பட்டி தொகுதியில் பல பகுதிகளில் பலரது பெயர்கள் வேறு முகவரியில் இருந்ததுகண்டறியப்பட்டது.
இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் அதிக குளறுபடி இருப்பதாக ராவ் தேனி மாவட்ட அதிகாரிகளிடம்தெரிவித்தார்.
அவரைச் சமாதானப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையெல்லாம் ராவ் நிராகரித்தார். இங்குகண்டறியப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் குறித்து தன்னுடைய அறிக்கையில் கடுமையாக அவர் குறிப்பிடுவார்என்று தெரிகிறது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications