மதுரை அருகே ரூ.9 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே ஒரு வேனில் கடத்தப்பட்ட 175 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கருவேலம்பட்டி அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு வேனைநிறுத்திச் சோதனை போட முயன்றனர் போலீசார்.
ஆனால் அந்த வேன் நிற்காமல் போய்விட்டது. இதையடுத்து அந்த வேனை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
போலீசார் அருகில் வந்ததும் அந்த வேனிலிருந்தவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்.
பின்னர் அந்த வேனைச் சோதனையிட்ட போலீசார், அதிலிருந்த சாக்குப் பைகளில் கஞ்சா இருப்பதைக் கண்டுஅதிர்ந்தனர்.
சுமார் 175 கிலோ எடை கொண்ட இந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications