ஒசூர் அருகே துப்பாக்கியால் சுட்டு ரூ.3 லட்சம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

ஒசூர் அருகே பட்டப்பகலில் பெட்ரோல் பங்கில் இருந்து பணத்தை எடுத்து வந்தவரை, மர்ம கும்பல் ஒன்றுதுப்பாக்கியால் சுட்டு அவரிடமிருந்து ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது.

தர்மபுரி மாவட்டம் ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் பகவதி பெட்ரோல் பங்க் ராமமூர்த்தி என்பவருக்குசொந்தமானது. அவருடைய மைத்துனர் முனிராஜ் (32) அந்த பங்க்கை நிர்வகித்து வந்தார்.

தினமும் பெட்ரோல் பங்கில் வசூலாகும் பணத்தை ஒசூரில் உள்ள வங்கியில் செலுத்துவது வழக்கம். நேற்று(வெள்ளிக்கிழமை) காலை வழக்கம் போல் 10.30 மணியளவில் வங்கியில் பணத்தைச் செலுத்த ரூ.3.25 லட்சத்துடன்டூ வீலரில் ஒசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒசூர் அருகே உள்ள குமேதபள்ளி அருகில் வரும்போது அவரை இன்னொரு டூ வீலரில் மூன்று பேர்பின் தொடர்ந்து வந்தனர். இவர்கள் மூவரிடமும் துப்பாக்கி இருந்தது.

மூவரில் இருவர் முனிராஜை துப்பாக்கியால் சுட்டனர். இதில் முனிராஜின் மார்பில் ஒரு குண்டும், வயிற்றில் ஒருகுண்டும் பாய்ந்ததால் இவர் கீழே விழுந்தார். உடனே இந்த கும்பல் இவர் ஸ்கூட்டரில் வைத்திருந்த பணத்தைகொள்ளையடித்துச் சென்றது.

பணத்தை கொள்ளையடித்து விட்டு கொள்ளையர்கள் ஒசூரை நோக்கி வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.துப்பாக்கியால் சுடப்பட்ட முனிராஜ், ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு ஒசூரில் உள்ள தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவரது மார்பில் உள்ள குண்டை அகற்ற முடியாததால், மிகவும் ஆபத்தான நிலையில் அவரை பெங்களூர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஹட்கோ போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+