தமிழகத்தில் புலிகளை அனுமதிக்க மாட்டோம்: ஜெ. உறுதி
சென்னை:
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் இடமளிக்கதமிழக அரசு அனுமதிக்காது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம்எழுதியுள்ளார்.
இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்னை அல்லது தென்னிந்திய நகரமொன்றில்தங்களது பிரதிநிதியான ஆண்டன் பாலசிங்கம் தங்கியிருக்க இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றுவிடுதலைப்புலிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புலிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றுகோரி முதல்வர் பன்னீர்செல்வம் சமீபத்தில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளை தமிழகத்திற்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாதுஎன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தனது கடிதத்தில், எனது ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அடக்கப்பட்டார்கள்.
விடுதலைப் புலிகள் தமிழகத்தில் நடமாடிய காலத்தில் மக்களுக்கு எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள்என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் இருந்தபோதுதான் தமிழகத்தில் துப்பாக்கி, வெடிகுண்டுகலாச்சாரம் அறிகமானது.
அவர்களை அடக்கியதில் முக்கிய பங்கு வகித்தது அதிமுக. இதனால், மீண்டும் அவர்களை தமிழகத்தில்அனுமதிக்க மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள்தமிழகத்தைத் தளமாகக் கொண்டு செயல்படுவதை உறுதியாக எதிர்ப்போம்.
தமிழகத்தில் புதிதாகத் தோன்றிய இரு தமிழ்த் தீவிரவாத அமைப்புகளை புலிகள்தான் உருவாக்கியுள்ளார்கள்என்ற நிலையில் புலிகளை தமிழகத்திலிருந்து பேச்சுவார்த்தையில் பங்கு பெற அனுமதித்தால், புலிகளுக்குஆதரவாக இங்கே செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் உத்வேகம் பெற்று, தமிழகத்திற்கு விரோதமான,இந்தியாவுக்கு எதிரான இயக்கத்தை பெரிய அளவில் வலுப்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இதனால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பெரும் கேடாக அமையும் வாய்ப்பும் உள்ளது என்றுஅக்கடிதத்தில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications