டெல்லியில் 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் குடியரசு தினத்தன்று குண்டு வைத்து நாசம் விளைவிப்பதற்காக வந்த 4 லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதிலிருந்தே நாடு முழுவதும் பாதுகாப்புப் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 15க்குள் அல்-கொய்தா இயக்கத்தினர் அத்வானி உட்பட முக்கிய தலைவர்களைக் கொல்லப்போவதாக உளவுத் துறையினருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் மிக உஷாராக டெல்லியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்டெல்லி போலீசார் நேற்று (திங்கட்கிழமை) இரவு 4 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை கைது செய்தது.

இவர்களிடமிருந்து 8 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளும், ரூ.35 லட்சத்தையும் டெல்லி போலீசார் பறிமுதல்செய்தனர்.

இவர்கள் 4 பேரும் குடியரசு தினத்தன்று மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் குண்டு வைக்கத்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இத்தீவிரவாதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+