சேலத்தில் கோடிக்கணக்கில் "சைபர்" மோசடி: சாப்ட்வேர் நிறுவன அதிபருக்கு வலைவீச்சு
சேலம்:
வேலையில்லா பட்டதாரிகளிடம் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய சேலம் போலி சாப்ட்வேர் அதிபர் தனதுகுடும்பத்துடன் தலைமறைவானார்.
படித்து விட்டு வேலையில்லாத பட்டதாரிகளை குறிவைத்து சேலம் அயோத்தியாப் பட்டணத்தைச் சேர்ந்தவெங்கடாசலம், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் போலி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தை 4மாதங்களுக்கு முன்பு துவங்கினார்.
தனது நிறுவனத்தில் ஆயிரம் முதல் ஐந்து லட்சம் வரை டெபாசிட் செலுத்துவோருக்கு ஒப்பந்த அடிப்படையில்டேட்டா எண்ட்ரி வேலை கொடுப்பதாகவும், வேலையை முடித்து கொடுப்பவர்களுக்கு வேலைக்கு ஏற்பரொக்கப்பணமும் பரிசுப் பொருட்களும் ஒப்பந்தம் முடிந்ததும் டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படும் எனவிளம்பரம் செய்தார் வெங்கடாசலம்.
இதை நம்பி வேலையில்லா பட்டதாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் அந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் லட்சக்கணக்கான ரூபாய் டெபாசிட் செலுத்தி வேலையில் ஈடுபட்டனர். ஒப்பந்த காலம் முடிந்ததும் ஒப்பந்தகாரர்களுக்குவங்கிக் காசோலை வழங்கப்பட்டது.
ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகளை வாங்க வங்கி அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால்ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர்கள் வெங்கடாசலத்திடம் முறையிட்டனர். கடந்த 9ம் தேதிக்குள் பணத்தை திருப்பிகொடுத்து விடுவதாக உறுதி கூறினார்.
ஆனால், 9ம் தேதியும் கொடுக்கவில்லை. அன்று இரவே குடும்பத்துடன் வெங்கடாசலம் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே சேலம் போலீஸ் துணை கமிஷனர் கோவிந்தராஜூலுவிடம்புகார் கூறினர்.
போலீஸ் கமிஷனர் விஜய்குமார் மேற்பார்வையில் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தனிப்படை அமைத்துவிசாரித்து வருகின்றனர்.
கடந்த 9ம் தேதி முதல் தலைமறைவாகியிருக்கும் வெங்கடாசலம் வெளிமாநிலங்களுக்கு தப்பியிருக்கலாம் என்றுகருதும் போலீசார், கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களுக்கும் சிறப்புப் படையினரை அனுப்பியுள்ளனர்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications