படகு கவிழ்ந்து 5 பெண்கள் உள்பட 7 பேர் பலி
சென்னை:
சென்னை மெரினாவில் பொங்கலைக் கொண்டாட கடலில் படகு சவாரி சென்றபோது படகு மூழ்கி 3 பெண்கள்பரிதாபமாக இறந்தனர். இதேபோல் நெல்லை மாவட்டம் உவரியிலும் படகு கவிழ்ந்து 4 பேர் பலியானார்கள்.
சென்னையில் மாட்டுப் பொங்கலை ஒட்டி நேற்று (செவ்வாய்க்கிழாமை) ஆயிரக்கணக்கான மக்கள் மெரீனாகடற்கரையில் கூடினர். அங்கு எம்.ஜி.ஆர். சமாதி பின்புறம் 2 மீன்பிடி இயந்திர படகுகளில் தலா 20 பேர் வீதம்பொதுமக்கள் உல்லாச சவாரி செய்தனர்.
படகு மெரீனா கடற்கரை சீரணி அரங்கம் பின்புறம், கரையிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் வரும்போது, ராட்சதஅலைக் காரணமாக படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணம் செய்த 20 பேரும் கடலுக்குள்மூழ்கினார்கள். காப்பாற்றுங்கள் என்று அவர்கள் அனைவரும் அலறினர்.
அவர்களை அலறலை கேட்டு அருகில் சென்ற இன்னொரு படகில் சென்றவர்கள் கடலில் மூழ்கிய பெரும்பாலானபேரை காப்பாற்றினார்கள். படகு கவிழ்ந்த பகுதியில் ஆழம் குறைவானதால் நீச்சல் தெரிந்த ஆண்கள் நீந்தி கரைஏறி விட்டனர். ஆனால் பெண்களும், குழந்தைகளும் மட்டும் சிக்கிக் கொண்டார்கள்.
மாலை 5 மணிக்கு 2 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கின. 3 வது பெண் உயிருக்கு போராடிய நிலையில்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவர்கள் விவரம், முகப்பேர் ஜெய்குமாரி, பூந்தமல்லிஜெயந்தி, ராதா.
கடலில் மூழ்கிய இரண்டு குழந்தைகள் பிரீத்தி (10), லாவண்யா (2) அதிசயமாக உயிர் தப்பினர். இவர்களின்பெற்றோர் யார் என்று தெரியவில்லை. மயங்கிய நிலையில் இருக்கும் இவர்கள் தனியார் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலில் மூழ்கியவர்களில் இன்னும் வேறு யாராவது இறந்துள்ளார்களா என்ற விவரம் தெரியவில்லை. போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் 4 பேர் பலி
இதே போல் நெல்லை மாவட்டம் உவரியிலும் பொது மக்கள் படகில் சவாரி சென்ற போது படகு மூழ்கி 2 பெண்கள்உட்பட 4 பேர் இறந்தனர்.
மற்றவர்களின் அலறலைக் கேட்டு, அருகே சென்ற மற்றொரு படகுகளில் இருந்தவர்கள், 18 பேரை காப்பாற்றினர்.இந்நிலையில் ஒரு சிறுவனின் உடல் இன்று (புதன் கிழமை) காலை கரை ஒதுங்கியுள்ளது. இன்னும் 2 பேரைக்காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications