For Daily Alerts
Just In
ஆப்கானிஸ்தானில் பாவல்
காபூல்:
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் இன்று (வியாழக்கிழமை) காலை ஆப்கானிஸ்தான்தலைநகர் காபூல் சென்று சேர்ந்தார்.
ஆப்கானிஸ்தான் இடைக்காலப் பிரதமர் ஹமீத் கர்சாய் உள்பட பல தலைவர்களையும் அதிகாரிகளையும் பாவல்சந்தித்துப் பேசவுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விவாதிப்பார் என்றுதெரிகிறது.
பின்னர் இன்று பிற்பகல் அவர் இந்தியாவிற்குக் கிளம்புவதற்கு முன் காபூலில் பத்திரிக்கை நிருபர்களைச்சந்திக்கவும் உள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் ஆப்கானிஸ்தானுக்குச்செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, January 17, 2001, 5:30 [IST]