பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு: பாமக போராட்டம்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மர்ம ஆசாமிகளால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதையடுத்து, பாமகவினர் கதவடைப்பு மற்றும்சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் அம்பேத்கர் சிலை ஒன்றை பாமக நிறுவியிருந்தது. அந்தசிலைக்குப் பக்கத்திலேயே பாமக கொடிக் கம்பமும் இருந்தது.
நேற்று (வியாழக்கிழமை) இரவு சில மர்ம மனிதர்கள் அம்பேத்கர் சிலையின் கை மற்றும் சில பாகங்களைஉடைத்துள்ளனர். மேலும் கொடிக்கம்பத்தில் இருந்த பாமக கொடியையும் கிழித்துள்ளனர்.
இன்று காலையில் இதைக் கண்ட பாமகவினர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். இதையடுத்து மார்க்கசிஸ்ட்,கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு அந்த பகுதியில் பாமகவினர் கதவடைப்பு நடத்தினர்.
பிறகு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த காவல் துறைக் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்தார். சம்பவத்தில்தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி பாமகவினரைஅவர் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து பாமகவினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஏராளமான போலீசார் அந்தப் பகுதியில்பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பேத்கார் சிலை உடைப்புச் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications