இந்திய நடவடிக்கைகள் சரியானவையே: அமெரிக்கா
டெல்லி:
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தானில் தனது பயணத்தை முடித்துவிட்டு நேற்று இந்தியா வந்த அமெரிக்கவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசினார்.
ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசிய பின் நிருபர்களை சந்தித்த பாவல்,
தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை அமெரிக்கா வரவேற்கிறது.அதே நேரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என இந்தியா கூறுவதையும் ஏற்கிறோம்.
இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் செயல்கள் குறித்து இந்தியாவால் தான் சரியாக எடைபோட முடியும். என்னஇருந்தாலும் நாங்கள் மூன்றாவது நாடு தான். தனக்கு எது சரி என்பது இந்தியாவுக்குத் தெரியும்.
அதே நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நட்பு நாடுகளுக்கும் உதவ தயாராக இருக்கிறோம் என்றார்.
பின்னர் நிருபர்கள் மத்தியில் பேசிய ஜஸ்வந்த் சிங், தீவிரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தான் சில நடவடிக்கைகள்எடுத்து வருவதை வரவேற்கிறோம். தொடர்ந்து பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைகளைக் கண்காணித்துவருகிறோம். அவர்களின் செயல்பாட்டைப் பொறுத்துத் தான் எங்களது செயல்களும் அமையும்.
தீவிரவாதிகளை பாகிஸ்தான் மீண்டும் தூண்டிவிட்டால் இந்தியா அதை ராணுவரீதியில் சந்திக்கும். தீவிரவாதிகளைக்கைது செய்வதில் பாகிஸ்தான் அரசுக்கு மேலும் கால அவகாசம் தர விரும்புகிறோம். நாங்கள் கேட்டுள்ள 20தீவிரவாதிகளையும் எங்களிடம் ஒப்படைக்காத வரை பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை.
ராணுவத்தையும் எல்லையில் இருந்து வாபஸ் பெறவும் வாய்பில்லை என்றார்.
முன்னதாக பாகிஸ்தான் சென்றிருந்த காலின் பாவல், காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிஇந்திய எதிர்ப்புக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கிறார் பாவல்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications