ஜெயாவுக்கு எதிராக 3வது அணி அமைவதில் புதிய சிக்கல்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா மற்றும் திமுகவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள்ஆரம்பத்திலேயே பணால் ஆகப் போவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த த.மா.கா., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட் ஆகியவை ஜெயலலிதாவிடம் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிவிட்டன.
ஜெயலலிதாவை எதிர்த்து திமுகவும், மதிமுகவும் தனித்தனியே போட்டியிடுகின்றன.
ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய த.மா.கா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் குட்டிக்கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிடத் திட்டமிட்டிருந்தன.
ஆனால், இப்போது காங்கிரஸ் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதிடீரென போர்க் கொடி தூக்கியுள்ளது.
மூன்றாவது அணி அமைப்பது குறித்து இன்று த.மா.கா. தலைமையகமான சாஸ்திரி பவனில் கூட்டம் நடந்தது.இதில் த.மா.கா. தலைவர் வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இக் கூட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் லட்சுமணன் நிருபர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் எங்கிருந்தாலும் நாங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். இதில் நாங்கள் மிக உறுதியாகஇருக்கிறோம் என்றார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய வாசன், நான் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடனும் தொடர்ந்து பேசிவருகிறேன். அதிமுக, திமுகவை எதிர்ப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறோம். எங்களது 3வது அணி சில தினங்களில்தயாராகிவிடும் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய நல்லகண்ணு, திமுக, அதிமுகவை எதிர்க்கும்அனைத்து மத சார்பற்ற கட்சிகளும் ஒரேஅணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பினால் தான் காங்கிரஸ் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லைஎன்று தெரிகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சமாதானப்படுத்தும் வாசனின் முயற்சி பலிக்கவில்லை.
இதனால், இந்தக் கட்சியை கழற்றிவிட்டுவிட்டு த.மா.கா., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி உருவாகும்என்று தெரிகிறது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications