இந்தியா வருகிறார் அமெரிக்க எப்.பி.ஐ. தலைவர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

தீவிரவாதிகளை ஒடுக்குவது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அமெரிக்காவின் பெடரல்பீரோ ஆப் இன்வஸ்டிகேசன்ஸ் (எப்.பி.ஐ.) அமைப்பின் தலைவர் ரகாபர்ட் முல்லர் இந்தியா வரவுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற இந்திய உள்துறை அமைச்சர் அத்வானியுடன் இந்திய அன்னிய உளவுப் பிரிவின்(ரா) தலைவர் விக்ரம், இன்டலிஜென்ஸ் பீரோ தலைவர் கே.பி.சிங், சி.பி.ஐ. இயக்குனர் பி.சி. சர்மா ஆகியோரும்உடன் சென்றனர்.

அங்கு பென்டகன், எப்.பி.ஐ., சி.ஐ.ஏ. அதிகாரிகளுடன் இந்தக் குழு ஆலோசனை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக எப்.பி.ஐ. தலைவர் ராபர்ட் திங்கள்கிழமை இந்தியா வருகிறார். அவர் இந்தியப் பிரதமர்வாஜ்பாயையும், அத்வானியையும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவையும் சந்திப்பார் என்றுதெரிகிறது. இவர்கள் தவிர சி.பி.ஐ, ஐ.பி., ரா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்.

ஏற்கனவே, இந்தியா-அமெரிக்கா இடையே தீவிரவாதிகள் தடுப்பு தொடர்பான ஒப்பந்தம் உள்ளது.

இதன்படி 1999ம் ஆண்டு இந்திய விமானம் நேபாளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டது தொடர்பாகஇந்தியாவும், அமெரிக்காவும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இதில் குற்றவாளிகளைப் பிடிக்க இந்தியாவுக்குஅமெரிக்கா உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+