இந்திய உள் நாட்டு விவகாரங்களில் தலையிடும் முஷாரப்
இஸ்லாமாபாத்:
படைகள் குவிப்பால் ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் பதற்றம் நிலவி வரும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில்கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்ப ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறேன்.பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்க வேண்டும் என பிரதமர் வாஜ்பாயைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் நீங்கள் பேசலாமே என்ற கேள்விக்கு பதிலளித்த முஷாரப், இந்தியாவின்கோரிக்கைகளை ஏற்று நான் இறங்கி வந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இப்போது இந்தியா தான்இறங்கி வர வேண்டும். அவர்கள் முதலில் பேசுவது தான் சரியாக இருக்கும்.
பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என இந்தியாவும் விரும்பும் என்றே நினைக்கிறேன். காஷ்மீர் உள்பட எல்லாபிரச்சனைகள் குறித்தும் பேச பிரதமர் வாஜ்பாய் ஆர்வம் காட்டுவார் என்றே நம்புகிறேன். ஆக்ரா சென்று அவரைச்சந்தித்தபோது அவர் எல்லா விஷயங்கள் குறித்தும் பேசத் தயாராக இருப்பதை புரிந்து கொண்டேன்.
ஆனால், அங்கு விரைவில் தேர்தல் (உத்தரப் பிரதேச) நடக்க இருக்க உள்ளது. அதை மனதில் கொண்டு தான்எங்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியத் தலைவர்கள் ஆர்வம் காட்ட மறுப்பதாக நினைக்கிறேன்.
இந்தியாவின் ஆளும் கூட்டணியில் ஒற்றுமை இல்லை. எனது பேச்சைப் போலவே எனது நடவடிக்கைளுக்கும்இருக்க வேண்டும் என இந்தியா கூறியுள்ளதை கண்டிக்கிறேன். இப்படிச் சொல்ல அவர்கள் யார்?
அந் நாட்டுத் தலைவர்களின் செயல்களுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் இடையில் கூட பெரியவித்தியாசம் இருக்கிறது. நான் கடந்த 12 ம் தேதி தீவிரவாதத்துக்கு எதிராக பேசியதைக் கூட இந்தியா திறந்தமனதுடன் வரவேற்கவில்லை.
தீவிரவாதிகளுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுப்பது இந்தியாவுக்கு பயந்து அல்ல. எனது நாட்டு மக்களுக்காகஅதைச் செய்கிறேன்.
இந்தியா கொடுத்துள்ள 20 பேர் கொண்ட பட்டியலில் பாகிஸ்தானியர்களும் உள்ளனர். அவர்களை இந்தியாவிடம்ஒப்படைக்க மாட்டோம். அப்படியே அவர்கள தவறு செய்திருந்தாலும் பாகிஸ்தானில் வைத்துத் தான்விசாரிப்போம். இந்தியா கொடுத்துள்ள பட்டியலில் உள்ள இந்தியர்கள் யாரும் இப்போது பாகிஸ்தானில் இல்லை.
இந்தியாவிடம் கூடுதல் படைபலம் இருந்தாலும் பாகிஸ்தானைப் பாதுகாத்துக் கொள்ள எங்கள் ராணுவத்தால்முடியும். பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, தாக்கவும் எங்களுக்கு பலம் உண்டு.
பல நாடுகளிலும் சிறிய படைகள் தான் பெரிய படைகளை வென்று வருகின்றன. அணு ஆயுதங்களை எக் காரணம்கொண்டும் பயன்படுத்த மாட்டோம் என்றார்.
பேட்டியின்போது முஷாரப் குழம்பிப் போய் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
இந்தியாவுடன் மோத முடியாது என்பதை ஒப்புக் கொண்ட அதே நேரத்தில் தான் பணிந்து போவது வெளியில்தெரியக் கூடாது என்பதை மறைப்பற்காக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்வண்ணம்இருந்தார்.
ஒரு கட்டத்தில் இந்தியப் பிரதமரைப் பாராட்டிய அவர் மறு நிமிடமே இந்தியாவின் கருத்துக்களை கண்டிப்பதாகக்கூறினார்.
இந்திய ஆளும் கூட்டணி, உத்தரப் பிரதேச தேர்தல் ஆகிய பிரச்சனைகளை தேவையில்லாமல் முஷாரப்பேசியதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று தெரிகிறது.
இது போன்ற பேச்சுக்களை அவர் நிறுத்தாத வரை அந் நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதுசாத்தியமில்லை.
ஐ.நாவில் இந்தியா-பாக் சண்டை:
இந்திய-பாகிஸ்தான் சண்டை நேற்று ஐ.நா சபையிலும் எதிரொலித்தது. ஐ.நா. பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் பேசியஇந்தியத் தூதர் கமலேஷ் சர்மா, பாகிஸ்தானில் இருந்து கொண்டு செயல்படும் தீவிரவாதிகள் இந்தியவைைமட்டுமல்ல, உலகின் பொறுமையையே சோதித்து வருகின்றன என்றார்.
இதற்கு பாகிஸ்தான் தூதர் ஷம்ஷத் அகமத் பதில் கூற இந்தியத் தூதரும் பதில் கூற விவாதம் மிக சூடாக இருந்தது.












Click it and Unblock the Notifications