ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு இறந்த முதிய தம்பதி
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் தனியாக வசித்து வந்த ஒரு தாத்தாவும் பாட்டியும் குடும்பத் தகராறில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இருவருமேஇறந்தனர்.
அவர்களது பிணம் 3 நாட்கள் கழித்து வியாழக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது.
திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் (73). இவரது மனைவி சுகந்தி (65). இவர்களது மகன் ஐசக். இவர் தூத்துக்குடியில்வேலை பார்த்து வருகிறார். மனைவி புனிதாவுடன் அவ்வப்போது திருநெல்வேலி வந்து தந்தை, தாயை பார்த்து விட்டுச் செல்வார்.
அதேபோல, வியாழக்கிழமை இரவு ஐசக், தனது மனைவியுடன் நெல்லை வந்தார். பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோதுவீடு உள்பக்கமாக பூட்டிக் கிடப்பதை பார்த்தார்.
மேலும், காலையில் போடப்பட்ட பால் பாக்கெட், நாளிதழ் ஆகியவை வெளியே அப்படியே கிடந்ததைப் பார்த்ததும் குழம்பினார்.சந்தேகப்பட்ட அவர் வீட்டுக்குப் பின்புறமிருந்த ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது உள்ளே இருந்த அறையில் ரத்தக் கறைஇருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார் ஐசக். போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு தனித்தனியாக இரு அறைகளில் சுகந்தியும், ஜோசப்பும் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். சுகந்தியின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது.
இருவரையும் வெளியில் இருந்து வந்து யாரும் கொல்லவில்லை என்று போலீஸார் உறுதியாக தெரிவித்துள்ளனர். காரணம், கதவுஉள்பக்கமாக பூட்டிக் கிடக்கிறது. மேலும், நகை, பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோசப்புக்கும்,சுகந்திக்கும் தகராறு ஏற்பட்டிருக்க வேண்டும். அதில் கோபமடைந்த ஜோசப், சுகந்தியை அடித்திருக்க வேண்டும், பதிலுக்கு சுகந்தியும்ஜோசப்பை அடித்திருக்க வேண்டும்.
அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுகந்தியை கழுத்தை நெரித்து ஜோசப் கொன்றிருக்க வேண்டும். பிறகு பயந்து போய் தானும் தற்கொலைசெய்திருக்க வேண்டம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம் என்று பக்கத்துவீடுகளில் வசிப்போர் தெரிவித்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு ஐசக் தவிர இஸ்ரவேல் என்ற மகனும் உள்ளார். அவர் நாக்பூரில் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications