தீவிரவாதிகளை ஒடுக்க ஆரம்பித்துள்ளது பாக்: அமெரிக்கா கருத்து
டெல்லி:
இந்தியாவில் தீவிரவாத்தைத் தூண்டும் செயல்களை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் தான் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்றஅவசியமில்லை. தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பேசினால் மட்டும் போதாது. அவரதுசெயல்களிலும் காட்ட வேண்டும். அவர் காட்ட ஆரம்பித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் பல விஷயங்களைப் பேசினேன். பிரச்சனையைத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கைவந்திருக்கிறது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடேயே நிச்சயம் போர் நடக்காது என்று கூறும் அளவுக்குஇதுவரை முன்னேற்றம் ஏறபடவில்லை.
20 தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து முஷாரப் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என்றுநம்புகிறேன். பிரச்சனையை தீர்க்கும் விதத்தில் அவர் முடிவெடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications