ஆண்டிப்பட்டி தேர்தலுக்கு சிதம்பரம் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

ஆண்டிப்பட்டியில் மட்டும் இடைத் தேர்தலை நடத்துவது தேர்தல் கமிஷனரின் தவறான முடிவு என்று காங்கிரஸ்ஜனநாயக பேரவை பொதுச் செயலாளர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சிதம்பரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆண்டிப்பட்டி தேர்தல் முடிவால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஆட்சியிலும் எந்தமாற்றமும் இருக்காது. எனவே இந்தத் தேர்தலுக்கு நாங்கள் எந்த முக்கியத்துவமும் தரவில்லை.

வாணியம்பாடி, சைதாப்பேட்டை இரு தொகுதிகளில் மட்டும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதுஎனக்கூறி அங்கு தேர்தலைத் தள்ளி வைத்துவிட்டு, ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல் நடத்துவது ஏற்றுக் கொள்ளமுடியாதது.

மூன்று தொகுதிகளில் நடக்க இருந்த முறைகேடுகள் இனி இந்த ஒரே தொகுதியில் நடக்கும். தேர்தலைபுறக்கணிப்பதாக காங்கிரஸ், தமாகா உட்பட கூட்டணிக் கட்சிகள் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் நல்ல ஆட்சி வரவேண்டும் என நான் மட்டும் நினைத்தால் போதாது. திமுக, அதிமுகவைத் தவிரஅனைத்துக் கட்சிகளும் இதை நினைத்து செயல்பட்டால் நிச்சயம் மாற்றம் வரும்.

என்னை விடப் பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முயற்சி செய்தால் நான் நிச்சயம் ஆதரவு தருவேன்என்று சிதம்பரம் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+