ராமதாசின் காதல் கடிதங்களை புத்தகமாக வெளியிட கருணாநிதி யோசனை
விழுப்புரம்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது காதல் கடிதங்களை புத்தகமாக வெளியிட வேண்டும் என திமுக தலைவர்கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் இரண்டு மகன்களின் திருமணம் கருணாநிதியின் தலைமையில்விழுப்புரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
இந்த திருமணத்தில் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ராஜா, நடிகர்விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமணவிழாவில் ராமதாஸ் பேசும்போது கூறியதாவது:
காதலித்தவர்களுக்குதான் காதலின் சுவை தெரியும். கல்லூரியில் நானும் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டேன்.
அப்போது நான் எழுதிய காதல் கடிதங்களை என் மனைவி இன்னும் பத்திரமாக வைத்துள்ளார் என்று ராமதாஸ்கூறினார்.
அதன் பிறகு கருணாநிதி பேசியபோது கூறியதாவது:
இங்கே அரசியல் பேச வேண்டாம் என பொன்முடி என்னைக் கேட்டுக் கொண்டார். மேலும் திண்டிவனம்ராமமூர்த்தி முன்னால் உட்கார்ந்திருக்கும்போது அரசியல் பேசுவது நாகரிகம் அல்ல. இது அரசியல் பேசும்தருணமும் அல்ல.
இது ஒரு காதல் திருமணம் என எல்லோரும் புகழ்ந்து பேசினர். குறிப்பாக ராமதாஸ் பேசும்போது, தானே காதல்திருமணம் செய்து கொண்டவர் என்று பேசினார். அவர் தனது காதல் கடிதங்களை இன்னும் பத்திரமாகவைத்திருப்பதாக கூறினார்.
எதிர்கால சமுதாயத்துக்கு பயன்பட, அந்த காதல் கடிதங்களை புத்தகமாக ராமதாஸ் வெளியிட்டால் இளைஞர்கள்பயன்படுத்துவதற்கு வழி ஏற்படும் என்று கருணாநிதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications