பெங்களூர் இன்போசிஸ் மீதும் தாக்குதல் நடக்கலாம்
டெல்லி:
கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தின் மீது தாக்குதல் நடத்திய அமைப்பு பாகிஸ்தானின் உளவுப் பிரிவானஐ.எஸ்.ஐயுடன் நெருங்கிய தொடர்புடையது என உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
தாக்குதல் நடத்திய அமைப்பு (ஆசிப் ராஸா கமாண்டோஸ்) பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமானது. தாக்குதல் நடந்தசில மணி நேரத்தில் துபாயில் இருந்து கொல்கத்தா போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசியவன் நாங்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளான். இது குறித்து நமது உளவுப்பிரிவினரிடம் விசாரித்தேன். இந்த அமைப்பின் தலைவன் கொலகத்தாவில் பல தொழிலதிபர்களைக் கடத்திவன்என்பதும், அவனுக்கு ஐ.எஸ்.ஐயுடன் மிக நெருங்கிய தொடர்பிருப்பதும் தெரியவந்தது என்றார் அத்வானி.
முன்பே எச்சரித்திருந்தது ஐ.பி.:
இந்திய புலனாய்வு அமைப்பான இன்டலிஜென்ஸ் பீரோ ஏற்கனவே இது போன்ற தாக்குதல் நடக்கலாம் என பலமாநில அரசுகளுக்கும் சமீபத்தில் எச்சரிக்கை அனுப்பியிருந்தது.
அதில், டெல்லியில் இனி தாக்குதல் நடத்துவது எளிதல்ல என்பதால் நாட்டின் பிற பகுதிகளில் சினிமாநட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடக்கலாம்.
பெங்களூரில் இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனம் மீதும், தாஜ்மகால், மும்பை ஏர்-இந்தியா நிறுவன தலைமையகம்,மும்பை பங்குச் சந்தைக் கட்டடம் ஆகியவற்றை தீவிரவாதிகள் தாக்கலாம்.
குறிப்பாக சமீப காலமாக குடியரசு தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது என்பதால்பாதுகாப்பை அனைத்து மாநிலங்களும் அதிகரிக்க வேண்டும் என அதில் ஐ.பி. எச்சரித்திருந்தது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications