ஜெ. ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்: பன்னீர் நம்பிக்கை
சென்னை:
ஆண்டிப்பட்டியில் அதிமுக தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை, அரசு இயந்திரமும் முறைகேடாகப்பயன்படுத்தப்படவில்லை என்று தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் தேர்தல் விதிகளை அதிமுக மீறவில்லை. மேலும் அரசு இயந்திரங்களும் முறைகேடாகப்பயன்படுத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறு கூறுகிறார்கள்.
ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவதாலேயே எதிர்க்கட்சிகள் அவ்வாறு கூறுகின்றனர். நாங்கள்தேர்தலுக்கான வேலைகளை மட்டுமே அங்கு செய்கிறோம்.
ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுகவின் கோட்டை. இங்கு ஜெயலலிதா அதிக வாக்குகள வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
நிதி நெருக்கடியால் தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவை மக்கள் விரோதக் கொள்கை என்று எதிர்க்கட்சிகள்கூறுகின்றன. இது மக்கள் விரோத செயல் அல்ல. அண்டை மாநிலங்களிலும் நிதி நெருக்கடியின்போது இதேநடவடிக்கையை தான் எடுத்துள்ளனர்.
தேர்தல் கமிஷன் பரிந்துரைப்படி முறைகேடு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் மேல் தகுந்த நடவடிக்கைவிரைவில் எடுக்கப்படும். இதற்கான உத்தரவு சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபகாலமாக அதிகரித்து வரும் விபத்துகளை தடுப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் 50 கி.மீக்கு, ஒருஆம்புலன்ஸ் நிறுத்தப்படும். இதன்மூலம் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைஅளிக்கப்படும் என்றார் பன்னீர்.


Click it and Unblock the Notifications
