விமானத்தில் வந்த ஜெ., ரயிலில் வந்த பன்னீர்
மதுரை:
ஆண்டிப்பட்டியில் நாளை (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா இன்று பிற்பகல் விமானத்தில் வந்து சேர்ந்தார்.
ஆனால் அவரை வரவேற்பதற்காக வந்த தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று காலை ரயிலில் வந்து சேர்ந்தார்.
இன்று பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு வந்த ஜெயலலிதாவுக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புகொடுக்கப்பட்டது.
ஜெயலலிதாவை வரவேற்பதற்காக அதிமுகவினர் கரகாட்டக் குழுவினரையும், பேண்டு வாத்தியக் குழுவினரையும்ஏற்பாடு செய்திருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், அதிமுக தொண்டர்களும் மதுரை விமானநிலையத்துக்கு வந்து குவிந்திருந்தனர்.
ஆனால் விமானத்தில் வந்து இறங்கிய ஜெயலலிதா, சில நிமிடங்களிலேயே தான் தங்கவுள்ள ஹோட்டலுக்குக்காரில் ஏறிப் பறந்து விட்டார்.
மதுரை விமான நிலையத்திலிருந்து ஜெயலலிதா தங்கவுள்ள ஹோட்டல் வரை ஏராளமான அலங்காரவளைவுகளையும், பேனர்களையும் அதிமுகவினர் கட்டியிருந்தார்கள். வழி நெடுக ஆயிரக்கணக்கானபோஸ்டர்களும் ஜெயலலிதாவை வரவேற்றன.
மேலும் விமான நிலையத்திலிருந்து ஜெயலலிதா தங்கவுள்ள ஹோட்டல் வரை நூற்றுக்கணக்கான போலீசார்பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அந்த ஹோட்டலிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications