கொல்கத்தா தாக்குதல்: அமெரிக்க இந்தியர்கள் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை அமெரிக்காவில்வாழும் இந்தியர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பாகிஸ்தானின் வாக்குறுதி என்ன ஆயிற்று என்றும்அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதலில் காஷ்மீர் சட்டசபை, பின்னர் இந்திய நாடாளுமன்றம், தற்போது அமெரிக்க மையம் என்று தொடர்ந்துதீவிரவாதிகள் தாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு தாங்கள் கொதித்துப் போயுள்ளதாகவும் அமெரிக்க இந்தியர்கள்கோபத்துடன் கூறியுள்ளனர்.

எதற்கும் ஒரு எல்லை உண்டு. அமெரிக்க மையத்தைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தான் அந்த எல்லையைமீறிவிட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதர் பி.கே. அக்னிதோத்ரி பல்வேறு அமெரிக்க இந்தியர்களைச் சந்தித்துப்பேசியுள்ளார்.

அவர்கள் அனைவரும் மிகவும் கொதித்துப் போயுள்ளனர் என்றும் இதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் தக்கபதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளதாகவும் அக்னிதோத்ரி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+