தடை நீக்கம்: அரசின் அறிவிப்புக்கு புலிகள் வரவேற்பு
கொழும்பு:
தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேகூறியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரும் தலைமைத் தூதருமான ஆண்டன் பாலசிங்கம்கூறியுள்ளதாவது:
இனப் பிரச்சனையைத் தீர்க்க அரசு உண்மையிலேயே அக்கறை காட்டுவதை இந்தப் பேச்சு காட்டுகிறது.பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க இந்தத் தடை பெரும் இடைஞ்சலாக இருந்து வருகிறது.
இந்தத் தடையை நீக்குவதன் மூலம் தமிழர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். தடைநீக்கம் என்பது புலிகளுக்குத் தரப்படும் சலுகை அல்ல, இது தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றவகையில் எங்களக்குத் தரப்படும் நியாயமான அங்கீகாரம்.
ஆனால், தடையை நீக்குவதை கதிர்காமர் விரும்பவில்லை என நினைக்கிறோம். இதன் மூலம் பேச்சுவார்த்தைகளைசீர்குலைக்க அவர் விரும்புகிறார். கதிர்காமர் பதவியில் இருந்தபோது புலிகள் எதிர்ப்பு, புலிகளுக்குத் தடை என்றஒரே நோக்கத்துடன் தான் செயல்பட்டார். இதன்மூலம் தனக்கு அளிக்கப்பட்ட பதவியையும் வீணாக்கினார்.
இதனால், இனப் பிரச்சனையில் கதிர்காமருக்கு மிக முக்கியப் பங்குண்டு.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைப் பொறுத்தவரை நியாயமாக நடந்து கொள்கிறார். உண்மை நிலையைப் புரிந்துவைத்திருக்கிறார். நாட்டில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறார் என்றார் ஆண்டன் பாலசிங்கம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications