இன்று இந்தியா வருகிறது ஆப்கானிஸ்தான் விமானம்
டெல்லி:
ஆப்கானிஸ்தானின் ஏரியானா நிறுவன விமானம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (வியாழக்கிழமை) டெல்லிக்குவருகிறது.
இதைத் தொடர்ந்து சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம் அப்போதைய தலிபான்அரசு ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக இந்த விமான நிறுவனத்திற்கு ஐ.நா. பாதுகாப்புக் குழுவும் தடைவிதித்திருந்தது.
இதையடுத்து ஏரியானா நிறுவனத்தின் முழு விமான சேவையும் நின்றுவிட்டது.
ஆனால் தற்போது தலிபான் அரசு கவிழ்ந்து விட்டதால், ஏரியானா விமான நிறுவனத்தின் மீதான தடைவிலக்கப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பல விமானங்களும் அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டிருந்தன. மேலும் பல விமான ஓடு பாதைகளும் சேதமாகியிருந்தன.
இவை அனைத்தும் சரி செய்யப்பட்ட பிறகுதான் ஏரியானா நிறுவனம் தன்னுடைய விமான சேவையைத்துவக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஏரியானா நிறுவனம் இன்று முதல் தன்னுடைய விமான சேவையை மீண்டும் தொடங்கவுள்ளது. முதல்முதலாக இந்தியாவுக்குத்தான் தன்னுடைய விமானத்தை இந்நிறுவனம் இயக்குகிறது.
இந்த விமானத்தில் ஆப்கானிஸ்தான் விமானப் போக்குவரத்து அமைச்சர் அப்துல் ரஹ்மானும், ஏரியானா விமானநிறுவனத்தின் தலைவர் ரஹுலுல்லா அமானும் டெல்லிக்கு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் மறுவாழ்வு சீரமைப்புப் பணிகளில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆப்கானிஸ்தானுக்கு 10 லட்சம் டன்கள் கோதுமை தரப் போவதாகவும் ரூ.500 கோடி கடனுதவிஅளிக்கவுள்ளதாகவும் இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications