தீவிரவாதிகள் ஹிட்-லிஸ்டில் தலாய் லாமா?
பாட்னா:
பிகாரில் புத்தர் பிறந்த இடமான புத்த கயாவில் நடைபெற இருந்த காலச்சக்கரா என்ற விழா பாதுகாப்புக்காரணங்களினால் ரத்து செய்யப்பட்டது.
பிகாரின் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்க தலாய் லாமா வருவது அவரது பாதுகாப்பு நல்லதல்ல என இந்திய உளவுப்பிரிவினர் எச்சரித்தனர்.
இதையடுத்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவிடம் இது குறித்துப் பேசினர்.இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று கூறிய தலாய் லாமா விழாவை ரத்து செய்ய ஒப்புக் கொண்டார்.
ஆனால், இதில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான புத்த மதத்தினர் புத்தகயா வந்துவிட்டனர். இவர்கள் தங்கியுள்ள இடங்களிலும் நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்திலும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
நேற்று மாலையே விழா ரத்து செய்யப்பட்டதாக தலாய் லாமா அறிவித்துவிட்டாலும் கூட அங்கு கூடிவிட்ட மக்கள்கலைந்து செல்லவில்லை. அவர்கள் தொடர்ந்து பிரார்த்தனைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை விழா நடந்த இடத்துக்கு வந்த திடீரென்று வந்த தலாய் லாமா அனைவருக்கும் ஆசி வழக்கிவிட்டுஉடனடியாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். விழா ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் அனைவரும் வழிபாடுகளைமுடித்துவிட்டு அமைதியாக கலைந்து செல்லுமாறும் கூறிவிட்டுச் சென்றார்.
தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்திருப்பதால் தலாய் லாமாவுக்கு மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
கொல்கத்தா முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்:
இந் நிலையில் இன்று முழுவதும் கொல்கத்தாவில் பல இடங்களில் வெடிகுண்டுப் புரளிகள் கிளம்பியவண்ணம்இருந்தன.
பி.பி.டி. பாக் என்ற இடத்தில் உள்ள ஹாங்காங் பில்டிங் கட்டத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல்வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சோதனையிட்டனர். ஆனால், குண்டு ஏதும்சிக்கவில்லை. இருப்பினும் அங்கிருந்த நூற்றுக்கணக்கானவர் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேறினர்.இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
அதே போல யூகோ வங்கியிலும் குண்டு இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து மக்களும் ஊழியர்கள்வெளியில் ஓடினர். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு ஷூ தயாரிப்பு நிறுவனத்துக்கும், ஒருகிட்டங்கிக்கும் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடியவண்ணம் இருந்தனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்:
இந் நிலையில் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி 3 போலீசார் இறந்தனர். பூஞ்ச் மாவட்டத்தில் மண்டி என்ற இடத்தில்இத் தாக்குதல் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது கிரனைட்களைஎறிந்துவிட்டு ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளால் தீவிரவாதிகள் திடீரென சுட்டனர்.
இதையடுத்து போலீசாரும் திருப்பிச் சுட்டனர். ஆனால், தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். இத் தாக்குதலில் 3 போலீசார்இறந்தனர்.
வெடிகுண்டு மீட்பு:
அதே போல ஜம்மூ தேசிய நெடுஞ்சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு சரியான நேரத்தில்கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதால் மாபெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இங்கு வர இருந்த ராணுவ வாகனங்களைக் குறி வைத்து இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இதைஇந்தோ-திபேத்திய எல்லைப் போலீஸ் படையினர் கண்டறிந்து அகற்றினர்.
பி.எஸ்.எப். வீரர் பலி:
இந் நிலையில் காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் முகம்மத் அக்ரம் கிராமத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தஎல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் பசுராஜன் என்ற வீரர்இறந்தார்.
ரயிலில் வந்த 12 பேர் கைது:
இதற்கிடையே பங்களாதேஷில் இருந்து ரயில் மூலம் இந்தியாவுக்குள் வந்த 12 பேரை ரயில்வே போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
கொல்கத்தா ரயில் நிலையம் வந்திறங்கிய இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
வங்கதேச உளவுப் பிரிவினர் அளித்த தகவலின்பேரில் இவர்களைை இந்திய ரயில்வே போலீசார் கைதுசெய்யதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications