பழனி அருகே டவுன் பஸ் மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீச்சு
பழனி:
பழனி அருகே டவுன் பஸ் மீது மர்ம கும்பல் ஒன்று அதிரடியாய் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசி தீவைத்துவிட்டு ஓடிவிட்டது.
பழனியில் இருந்து பாப்பம்பட்டிக்கு நேற்று (புதன்கிழமை) அதிகாலை ஒரு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.அந்த பஸ்ஸில் டிரைவர் பகவதிவேலு, கண்டக்டர் கண்ணன் என்பவரும் பணியில் இருந்தனர்.
பஸ்ஸில் 3 பயணிகளே இருந்தனர். பஸ் நெய்காரப்பட்டி அருகே வந்த போது அங்குள்ள ஒரு வேகத்தடையைகடக்க வேண்டி டிரைவர் பஸ்ஸின் வேகத்தைக் குறைத்துள்ளார்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த மர்ம கும்பல் ஒன்று பஸ்ஸூக்குள் தாவி ஏறியது. இதைப் பார்த்ததும் டிரைவர்,கண்டக்டர் மற்றும் பயணிகள் திடுக்கிட்டனர். அந்த மர்ம கும்பல் பயணிகளை நோக்கி பெட்ரோல் குண்டுகளைவீசினர்.
சில பெட்ரோல் குண்டுகள் வீசிய வேகத்தில் பஸ்ஸின் கடைசி சீட்டுக்கு சென்று விழுந்து பயங்கர சத்தத்துடன்வெடித்தன. இதனால் அந்த இடத்தில் இருந்த சீட்டுகள் எல்லாம் குபுகுபுவென தீப்பிடித்து எரிந்தன. மர்ம கும்பல்பஸ்ஸில் இருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.
உடனடியாக டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். பயணிகள், கண்டக்டர், டிரைவர் உடனடியாக பஸ்ஸில் இருந்துஇறங்கி, தீயை அணைக்க மண்ணை அள்ளிப் போட்டனர்.
பெரும் விபத்து தடுக்கப்பட்டாலும், பஸ்ஸில் உள்ள சில சீட்டுகள் தீக்கிரையாகியது. இச்சம்பவம் குறித்து பழனிபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக இந்த மர்ம கும்பல் பஸ்ஸூக்கு தீ வைத்தனர் என்பதுதெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications