தீவிரவாதிகளைத் தேடுகிறதாம் பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்:
இந்தியா கொடுத்துள்ள 20 பேர் பட்டியலில் உள்ள 14 இந்தியர்களைத் தேடும் பணி நடந்து வருவதாக பாகிஸ்தான்கூறியுள்ளது.
ஆனால், இவர்கள் பாகிஸ்தானில் இல்லை என முதலில் கூறிய அந் நாட்டு அரசு பின்னர் அவர்களைஇந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று கூறியது. இதன் பின்னர் இந்தியாவில் பதுங்கியுள்ள பாகிஸ்தானுக்குஎதிரான தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றது.
பட்டியல் தந்தால் ஒப்படைக்கத் தயார் என்று இந்தியா உடனடியாக பதில் கூறியுடன் இன்னும் தயாராகவில்லைஎனக் கூற பாகிஸ்தான் மழுப்பியது.
ஆனால் நேற்று நிருபர்களிடம் பேசிய அந் நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில்,
இந்தியா கோரியுள்ள 20 தீவிரவாதிகளில் 14 இந்தியர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது. அவர்கள்பிடிபட்டால் எங்கள் நாட்டிலேயே வைத்து விசாரிக்கப்படுவர் என்றார்.
இந்தத் தீவிரவாதிகளை பாதுகாத்து வைத்திருப்பது பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐயும் தான். இவர்களைத் தேடிவருகிறோம் என பாகிஸ்தான் அரசு கூறுவது நகைப்புக்குரியது என இந்திய உளவுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மும்பை தாதாக்களான தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், மும்பை குண்டுவெடிப்பில்தொடர்புடைய டைகர் மேமன் ஆகியோர் கராச்சி நகரில் அரசின் பாதுகாப்புடன் மிக வசதியாக வாழ்ந்து வருவதைமுதலில் கண்டறிந்து வெளியிட்ட பாகிஸ்தான் வார இதழின் நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குலாம் ஹஸ்னைன் என்ற அந்த நிருபர் அமெரிக்காவின் டைம் இதழில் இச் செய்தியை வெளியிட்டார்.
மேலும் பாகிஸ்தான் நியூஸ்லைன் என்ற வாரஇதழின் பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்அனுப்பப்பட்டு வருவது குறித்த செய்தியையும் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
இப்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications